இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கப்பலோட்டிய தமிழனும் கள்ளத்தோணியும்

பல கசப்பான நிகழ்வுகளை  விதைத்துச் சென்ற முப்பது வருட கால யுத்தம் இன, மத வேறுபாடுகளைக் கடந்து  இலங்கை மக்கள் அனைவரது வாழ்விலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பலவிதமான எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பது மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ முடியாத வரலாறு. எமக்கிடையேயான  வேறுபாடு,  நமக்கிடையே காழ்ப்புணர்வை விதைத்ததும், அக் காழ்ப்புணர்வு இனங்களுக்கு இடையில் வன்முறைகளாக செயலாக்கம் அடைந்ததும் கண்கூடு. இந்த காழ்ப்புணர்வு எவ்வாறு ஆரம்பித்தது? யார் ஆரம்பித்து வைத்தது? யார் பொறுப்பாளி? எவரினுடைய வகிபங்கு அதிகமாது? குற்றவாளி யார்? மோசமான குற்றவாளி யார்? என்று ஆராய்வதல்ல இந்தப் பதிவின் நோக்கம். மாறாக, இந்த வன்முறையின் வடுக்கள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதனை, குறிப்பாக பாதிக்கப்படாமலேயே, பாதிக்கப்பட்டதாகக் கூறிக்கொண்டு வளர்முக நாடுகளில் எம்மவர்கள்  அகதி  அந்தஸ்து கோருகின்ற செயற்பாடு உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பினையும் நல்வாழ்வினையும் எந்த அளவுக்குப் பாதிக்கின்றது என்பது தொடர்பிலான ஒரு கண்ணோட்டமே இது. அகதி அந்தஸ்து கோருதல் தொடர்பாகப் பணியாற்றுகின்ற பல உண்ணாட்டு

"கடவுள்": ஒரு அனாவசியமான தேவை

ஒவ்வொரு நொடியும் விரியும் மக்கள் தொடர்பாடல் தினமும் பலவிதமான மனிதர்களை அறிமுகம் செய்தாலும்,  கலந்துரையாடல்கள், சில விபரிக்க முடியாத காரணங்களினால் தவிர்க்கப்பட முடியாததாகி விடுகின்றன. "நீ எந்த மதத்தைச் சார்ந்தவன்?" என்பதும் அதனோடு தொடர்புபட்ட இதர வினாக்களும் இவ் வகைக்குள் அடக்கம். இவ் வகையான சுயமிழக்காத ஆனால் அர்த்தமிழந்த இவ்வகை வினாக்கள்  எனக்கு சிலவேளைகளில் அசௌகரியத்தினையும் பலவேளைகளில் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்துவதுண்டு. அதன் பிரதிபலிப்பு தான் இந்தப் பதிவு. இந்தச் கேள்வியில் முகம் சுழிக்கவோ இல்லை இமை உயர்த்தவோ என்ன இருக்கிறது என்று நடு மண்டை சொறியும் உங்கள் விம்பம் என் மனத்திரையில் தெளிவாகத் தெரிகிறது. அவன்/அவள்: "நீ எந்த மதத்தைச் சார்ந்தவன்?" நான்: "எனக்கு இறை-நம்பிக்கை இல்லை". அவன்/அவள்: "அப்படியானால் நீ நாத்திகவாதியா?" நான்: "என் இறை-நம்பிக்கையின்மைக்கும் நாத்திகவாதத்துக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை".  அவன்/அவள்: ("இவனுக்கு மறை கழன்று விட்டது" என்ற எண்ணத்தை கஷ்டப்பட்டு மறைத்துவிட்டோம் என்ற அசட்டு  நம

வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்

முற்குறிப்பு: பல கலாசாரங்களுடனான கலப்புக்குப் பிறகும் என் தாய்மொழியை அதே மண் வாசனையுடன் சற்றும் பிறழாத உச்சரிப்புடன் பேசும் தமிழன் என்ற இறுமாப்புடன் எழுதுவது. எமது பிராந்திய ஊடகங்கள் மற்றும் சமூகத்தளங்கள், சில வேளைகளில் பெரும்பான்மை இனத்தவர்களை, குறிப்பாக இராணுவத்தினரையும் காவல் படையினரையும், சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டுவது வெள்ளிடை மலை. குறித்த வகுப்பினரின் எதிர்மறையான செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு உண்டென்பதனையும் மறுதலிக்க முடியாது. இருந்தாலும் எம்மவர்களுடைய இப்படியான கண்மூடித்தனமான சேறு பூசல்கள் இன ஐக்கியத்தினை (குறைந்தபட்சம் எம்முடைய நியாயத்தன்மையையாவது) எந்தளவுக்கு செறிமைப்படுத்தும் என்ற ஐயம் ஒரு பக்கம் இருக்க, இவ் வகையான பாரபட்சப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் பின்னாலுள்ள "அரசியல்" என்ன என்பது அலசப்பட வேண்டிய விடயம்.  குறிப்பாக குடாநாட்டில் அதிகம் பேசப்படுகின்ற "அதிகரித்த" பாலியல் பலாத்காரம், விபச்சாரம் மற்றும் இராணுவத்தினரின் அதீத சமூக ஈடுபாடு போன்றனவற்றை குறிப்பிடலாம். யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை பிரதட்சணம் செய்யப்பட்டதில் இராணுவத்