இடுகைகள்

ஜூலை, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றத்தினை மறுக்காத ஒரு பாமரத்தமிழன்

பொதுத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்ட பலவிதமான (அரசியல்) கருத்துக்கள் பல தரப்பட்ட மக்களிடையே / குழுக்களிடையே நிலவி வந்தாலும் தமிழ் மக்களினைப் பொருத்தவரையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தினைப் பொறுத்தவரையில் இரு அரசியல் கட்சிகள் தொடர்பிலான அவ் இரு கட்சிகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாறல்களும், சாடல்களும், சேறு பூசல்களும்  வகைதொகையின்றி வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இணைய ஊடகங்களும் முகப்புத்தக பதிவுகளும் தங்களுடைய நாளாந்த வாழ்வில் சிக்கித் திண்டாடிக்கொண்டிருக்கும் மக்களை அல்லல் படுத்திக்கொண்டிருப்பது கண்கூடு. இவ்வாறன கருத்துப் பரிமாறல்கள் மனித விழுமியங்களையும் நாம் வாய் கிழியப் பேசும் தமிழர் பண்பாடுகளையும் மீறாத வகையில் அமையும் வரைக்கும் ஆரோக்கியமானதே. ஒரு வகையில் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம் என்பதனை எம்மில் பலருக்கு நினைவுபடுத்துவதே தேர்தல்களும் இவ்வாறன கருத்து மோதல்களும் தான். நிற்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிகளுக்கு இடையிலான கட்சி ஆதரவாளர்களுக்கு இடையிலான வாதப்-பிரதிவாதங்கள் ஆரோக்கியமானதாக இல்லாமல் எதிரணியினர் மீது சேறு பூசுவதாக

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை

ஜனவரி 8 இற்கு முன்னர் அடாவடித்தனமான அரசியலுக்கு பயந்து வாயோடு சேர்த்து அத்தனை ஓட்டைகளையும் மூடிக்கொண்டிருந்த அத்தனை இன உணர்வாளர்களும் இன்று பாய்ந்தடித்துக்கொண்டு கருத்துச் சொல்வதைப் பார்க்கும் போது மைத்திரிக்கு வாக்களித்தது வீண்போகவில்லை என்பது தெளிவாகின்றது. கடந்த 9 வருடங்களாக நடந்த காட்டுமிராண்டித்தனமான ஆளுகைக்கும் அதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கி முனையில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முறைமைக்கும் பழக்கப்பட்டுப் போன எமக்கு, நாம் தற்போது சுவாசிக்கின்ற ஜனநாயகக் காற்றின் அடர்த்தி சற்று அசௌகரியமாக இருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. பத்திரிகைகளிலும் பத்திரிகை விழுமியங்களை அலட்சியப்படுத்தும் இணைய ஊடகங்களிலும் (ஒட்டுமொத்தமாக குற்றம் சாடுவதல்ல நோக்கம்) வெளிவரும் செய்திகள்  மாத்திரம் தான் இலங்கை அரசியல் என்கின்ற ரீதியில் தங்கள் அரசியல் ஆய்வுகளை முன்வைக்கும் கற்றுக்குட்டிகளை பார்க்கும் போது எமது வளர்ச்சியின் போக்கு புரிகிறது. 30 வருட யுத்தத்தினால் இலங்கையராகிய நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதனை மறுப்பதற்கில்லை. பாதிக்கப்பட்ட நபரின் திறனையும் பின்புல