இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொன்றது நீ; குற்றவாளி நான்: (தற்)கொலைகள்

அடுத்தடுத்து பிரசுரமாகும் தற்கொலை செய்திகள், தற்கொலை என்பது தொற்றும் தன்மை உடையது என்று சமீபத்தில் எங்கோ வாசித்ததை நினைவுபடுத்திச் சென்றது. குறித்த தற்கொலைச் செய்திகள் என் மனதினை ரம்பமாக அறுப்பதினை என்னால் ஒவ்வொரு நொடியும் உணரமுடிகிறது. ஒரு காலத்தில் தற்கொலை செய்பவர்கள் அனைவரும் முட்டாள்கள், முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று சொல்லித்திரிந்தவன் நான். ஆனால் இப்போதெல்லாம் அந்த அதிகப்பிரசங்கித்தனத்தினை எண்ணி வெட்கி நிற்கின்றேன். தற்கொலை என்பது எந்தக் காலகட்டத்திலும் எவராலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்பதனை மறுதலிக்கவில்லை. அதேவேளை, தற்கொலை செய்தவர்களை, செய்ய எத்தனிப்பவர்களை விமர்சிப்பதற்கான அருகதை (சமூக அங்கத்தவர்கள் என்ற வகையில்) சிறிதளவேனும் இருக்கிறதா என்பதனை ஆராய வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதனையும் மறுதலிக்க முடியாது. இங்கு எவரும் தன்னுடைய வாழ்க்கையை இப்படி இடைநடுவில் முடித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பூமிக்கு வருவதில்லை. நாகரிகம், வளர்ச்சி, மேம்பாடு என்ற செயற்கைத்தனமான சமூகக் கடப்பாடுகளின் தாக்கம் ஒவ்வொரு மனிதனதும் வாழ்க்கை உருவம் பெறுவதில்