இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொழுக்கட்டையா மோதகமா?

இலங்கையர்களாக எம்முடைய தலைவிதியினை நாமே தீர்மானிக்க ஆரம்பித்து 66 வருடங்கள் முடிவடைந்தும் எமக்கிடையேயான வேற்றுமைகள் இன்னும் களையப்படாமலே இருப்பது கண்கூடு. அடிக்கடி வந்துபோகும் தேர்தல்களும் கூடவே அரங்கேறும் ஆட்சி மாற்றங்களும் எம்முடைய வாழ்வின் தவிர்க்க முடியாத பாகங்களாகிவிட்டன. ஜனநாயக ஆட்சிக்கு இத்தகைய பொறிமுறைகள் அத்தியாவசியமானவை என்பது அனைவரும் அறிந்தது. இருப்பினும் இத்தகைய கட்சித் தேர்தல் பொறிமுறைகள், கையாளப்படுகின்ற / அணுகப்படுகின்ற தன்மை மனதினை நெருடுகின்ற வகையில் அமைந்துள்ளமை கசப்பான உண்மை. சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் (திடீர்) திருப்பங்களும் கட்சி மாறல்களும் மக்களின் மனதில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளமை கண்கூடு. தென்னிலங்கை அரசியல், தமிழர்களின் அபிலாசைகளை குழி தோண்டிப்புதைப்பதில் எவருக்கு ஈடுபாடு அதிகம் என்பதனையும் போரினை முடிவுக்குக் கொண்டு வந்தது மட்டும் போதுமா என்ற கேள்வியினையும் அடிப்படையாகக் கொண்டு சுழன்று கொண்டு இருக்கின்ற வேளையில் தமிழர்களின் குறிப்பாக வடக்கு கிழக்கினைத் தாயகமாக் கொண்ட தமிழர்களின் எதிர்பார்ப்புகள் வேறுவிதமாக உள்ளமை வெள்ளிடை மலை. அடுத்த ஜனா

கட்சி என்னும் காட்டாறு

ஒரே மாதிரியான கொள்கைகளையும், கோற்பாடுகளையும் அரசியல்-சமூக சித்தாந்தங்களையும் கொண்டவர்கள், தனி நபர் ஒருவரின் பின்னாலோ அல்லது ஒரு அமைப்பின் பின்னலோ ஒன்று திரள்வது என்பது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை. அந்த உரிமையினை நிலைநாட்டும் எவரையும் சாடுவதல்ல இப்பதிவின் நோக்கம். மாறாக, காலப்போக்கில் இவ்வாறான அணிகள் தங்களுடைய அடிப்படையினை, அடையாளத்தினை இழந்து வெறுமனே அதிகாரத்தினைக் கைப்பற்றிக்கொள்வது அல்லது கைப்பற்றிக்கொண்ட அதிகாரத்தினைத் தக்கவைத்துக்கொள்வது என்ற ஒரே நோக்கத்தினை மையமாகக் கொண்டு தங்களுடைய செயற்பாடுகளினை முன்னெடுத்துச் செல்வதனையும் அத்தகைய அணிகளின் பின்னால், பகுத்தறிவின்றி மந்தைகளைப் போன்று ஓடிக்கொண்டு இருக்கின்ற துரதிர்ஷ்டத்தினையும் எனது வார்த்திகளில் பதிவிடுவதே நோக்கம். சில நபர்களை அல்லது குழுக்களினை, அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டாமலும் தட்டிக்கேட்காமலும் தங்களுடைய அரசியல் சுயலாபங்களுக்காக, அப்படியே அங்கீகரித்துக்கொள்கின்ற அரசியல்வாதிகளினை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கின்ற மடைமை களையப்படாவிட்டால் எம்முடைய அபிலாசைகள் மட்டுமன்றி அடையாளமும் அடியோடு அழிக்கப்பட்டுவிடும் என்பத

கொன்றது நீ; குற்றவாளி நான்: (தற்)கொலைகள்

அடுத்தடுத்து பிரசுரமாகும் தற்கொலை செய்திகள், தற்கொலை என்பது தொற்றும் தன்மை உடையது என்று சமீபத்தில் எங்கோ வாசித்ததை நினைவுபடுத்திச் சென்றது. குறித்த தற்கொலைச் செய்திகள் என் மனதினை ரம்பமாக அறுப்பதினை என்னால் ஒவ்வொரு நொடியும் உணரமுடிகிறது. ஒரு காலத்தில் தற்கொலை செய்பவர்கள் அனைவரும் முட்டாள்கள், முதுகெலும்பு இல்லாதவர்கள் என்று சொல்லித்திரிந்தவன் நான். ஆனால் இப்போதெல்லாம் அந்த அதிகப்பிரசங்கித்தனத்தினை எண்ணி வெட்கி நிற்கின்றேன். தற்கொலை என்பது எந்தக் காலகட்டத்திலும் எவராலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்பதனை மறுதலிக்கவில்லை. அதேவேளை, தற்கொலை செய்தவர்களை, செய்ய எத்தனிப்பவர்களை விமர்சிப்பதற்கான அருகதை (சமூக அங்கத்தவர்கள் என்ற வகையில்) சிறிதளவேனும் இருக்கிறதா என்பதனை ஆராய வேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதனையும் மறுதலிக்க முடியாது. இங்கு எவரும் தன்னுடைய வாழ்க்கையை இப்படி இடைநடுவில் முடித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பூமிக்கு வருவதில்லை. நாகரிகம், வளர்ச்சி, மேம்பாடு என்ற செயற்கைத்தனமான சமூகக் கடப்பாடுகளின் தாக்கம் ஒவ்வொரு மனிதனதும் வாழ்க்கை உருவம் பெறுவதில்

நல்ல மேய்ப்பரும் மேயத்தெரியாத மந்தைகளும்!

ஆடம்பர  அரசியல்  செய்தால் மட்டுமே அரசியல்வாதியாகப்  பிழைப்பு நடத்த முடியும் என்று வாழ்பவர்கள் மத்தியில், சம காலத்தில், 'நிறைகுடம் தழும்பாது' என்பதற்கு வாழும் சான்றாக இருப்பவர் சம்பந்தர் ஐயா. அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்பவர்கள் எவருமே அதில் இறங்கிச் சுத்தம் செய்ய முன்வந்ததில்லை. இறங்கி இருப்பவர்கள் எல்லோரும் சுத்தம் செய்ய வந்தவர்கள் இல்லை. முடிந்தவரை சுத்தம் செய்வேன் என்று 1977 இல் இருந்து பாடுபட்டு வரும் ஒரு நல்ல தலைவர், மேய்ப்பர்; தமிழர்களின் சம்பந்தன் ஐயா.   அடாவடித்தனத்தையும் அதிகப்பிரசங்கித்தனத்தையும் அரசியல் என்று கருதுகின்ற பல மூத்த அரசியல்வாதிகள் எமக்குக் கிடைத்த வரமல்ல; சாபம். இவ்வாறான அடாவடித்தனமானதும் அதிகப்பிரசங்கித்தனமானதுமான "அரசியல்" எமக்கு எந்த விதமான நன்மையையும் பயக்காது; மாறாக எமது இன ஒற்றுமையையும், எமக்குள்ள அங்கீகாரத்தையும் சீர்குலைக்கும் என்பதனைப் புரிந்துகொள்ளாத இளைஞர்களின் சூடான உதிரத்தில் குளிர்காயும் அரசியல்வாதிகளை இனம்கண்டு களையெடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.  ஆனால் இருந்தும் இல்லாமலிருக்கும்

தம்பி எனக்கொரு எழுதுமட்டுவாழ்!

இப் பதிவுடன் தொடர்புபட்ட சிறிய விபரத்துணுக்கு: யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு 116 km யாழ்ப்பாணம் - கொடிகாமம் 23 km சமீபத்தில் நீண்டகாலத்துக்குப் பிறகு ஆசன முற்பதிவு செய்யமுடியாத பேருந்தில் பயணம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. வேலை நிமித்தமாக யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைதீவுக்கு காலை 5.20 மணிக்கு புறப்பட்ட பேருந்தில் பயணம் செய்த போது ஏற்பட்ட, பார்த்த விஷயங்களின் உந்துதல் தான் இந்தப் பதிவு. முல்லைத்தீவுக்கு காலை 5.20 மணிக்கு செல்வதற்கு அதிகம்பேர் முண்டியடிக்கமாட்டார்கள் என்ற தப்புக் கணக்குடன் காலை 5.10 யாழ்ப்பாண தனியார் பேருந்துத் தரிப்பிடத்துக்கு சென்ற எனக்கு அதிர்ச்சி. வழிநெடுக இருக்கின்ற ஊர்களின் பெயரைக் கூவிக்கொண்டிருந்த நடத்துனரை அணுகி, பேருந்து சரியானது என்பதனை உறுதி செய்துகொண்டு உள்ளுக்குள் நுழைந்த என்னை ஆசனங்கள்  எங்கும் தூக்கம் வராமலே படுத்திருந்த பைகள் வரவேற்றன. ஏற்கனவே வந்திருந்தவர்கள் தமக்காகவும் இன்னும் வராத தமக்குத் தெரிந்தவர்களுக்காகவும் ஆசனங்களை தம்முடைய பைகளை வைத்து ஒதுக்கியிருந்தார்கள். அவசரமாகக் கண்கள் துளாவியதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு ஆசனங்கள் வெறுமையாக இருந

கப்பலோட்டிய தமிழனும் கள்ளத்தோணியும்

பல கசப்பான நிகழ்வுகளை  விதைத்துச் சென்ற முப்பது வருட கால யுத்தம் இன, மத வேறுபாடுகளைக் கடந்து  இலங்கை மக்கள் அனைவரது வாழ்விலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பலவிதமான எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியது என்பது மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ முடியாத வரலாறு. எமக்கிடையேயான  வேறுபாடு,  நமக்கிடையே காழ்ப்புணர்வை விதைத்ததும், அக் காழ்ப்புணர்வு இனங்களுக்கு இடையில் வன்முறைகளாக செயலாக்கம் அடைந்ததும் கண்கூடு. இந்த காழ்ப்புணர்வு எவ்வாறு ஆரம்பித்தது? யார் ஆரம்பித்து வைத்தது? யார் பொறுப்பாளி? எவரினுடைய வகிபங்கு அதிகமாது? குற்றவாளி யார்? மோசமான குற்றவாளி யார்? என்று ஆராய்வதல்ல இந்தப் பதிவின் நோக்கம். மாறாக, இந்த வன்முறையின் வடுக்கள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பதனை, குறிப்பாக பாதிக்கப்படாமலேயே, பாதிக்கப்பட்டதாகக் கூறிக்கொண்டு வளர்முக நாடுகளில் எம்மவர்கள்  அகதி  அந்தஸ்து கோருகின்ற செயற்பாடு உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பினையும் நல்வாழ்வினையும் எந்த அளவுக்குப் பாதிக்கின்றது என்பது தொடர்பிலான ஒரு கண்ணோட்டமே இது. அகதி அந்தஸ்து கோருதல் தொடர்பாகப் பணியாற்றுகின்ற பல உண்ணாட்டு

"கடவுள்": ஒரு அனாவசியமான தேவை

ஒவ்வொரு நொடியும் விரியும் மக்கள் தொடர்பாடல் தினமும் பலவிதமான மனிதர்களை அறிமுகம் செய்தாலும்,  கலந்துரையாடல்கள், சில விபரிக்க முடியாத காரணங்களினால் தவிர்க்கப்பட முடியாததாகி விடுகின்றன. "நீ எந்த மதத்தைச் சார்ந்தவன்?" என்பதும் அதனோடு தொடர்புபட்ட இதர வினாக்களும் இவ் வகைக்குள் அடக்கம். இவ் வகையான சுயமிழக்காத ஆனால் அர்த்தமிழந்த இவ்வகை வினாக்கள்  எனக்கு சிலவேளைகளில் அசௌகரியத்தினையும் பலவேளைகளில் ஆச்சரியத்தினையும் ஏற்படுத்துவதுண்டு. அதன் பிரதிபலிப்பு தான் இந்தப் பதிவு. இந்தச் கேள்வியில் முகம் சுழிக்கவோ இல்லை இமை உயர்த்தவோ என்ன இருக்கிறது என்று நடு மண்டை சொறியும் உங்கள் விம்பம் என் மனத்திரையில் தெளிவாகத் தெரிகிறது. அவன்/அவள்: "நீ எந்த மதத்தைச் சார்ந்தவன்?" நான்: "எனக்கு இறை-நம்பிக்கை இல்லை". அவன்/அவள்: "அப்படியானால் நீ நாத்திகவாதியா?" நான்: "என் இறை-நம்பிக்கையின்மைக்கும் நாத்திகவாதத்துக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை".  அவன்/அவள்: ("இவனுக்கு மறை கழன்று விட்டது" என்ற எண்ணத்தை கஷ்டப்பட்டு மறைத்துவிட்டோம் என்ற அசட்டு  நம

வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்

முற்குறிப்பு: பல கலாசாரங்களுடனான கலப்புக்குப் பிறகும் என் தாய்மொழியை அதே மண் வாசனையுடன் சற்றும் பிறழாத உச்சரிப்புடன் பேசும் தமிழன் என்ற இறுமாப்புடன் எழுதுவது. எமது பிராந்திய ஊடகங்கள் மற்றும் சமூகத்தளங்கள், சில வேளைகளில் பெரும்பான்மை இனத்தவர்களை, குறிப்பாக இராணுவத்தினரையும் காவல் படையினரையும், சகட்டு மேனிக்கு குற்றம் சாட்டுவது வெள்ளிடை மலை. குறித்த வகுப்பினரின் எதிர்மறையான செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு உண்டென்பதனையும் மறுதலிக்க முடியாது. இருந்தாலும் எம்மவர்களுடைய இப்படியான கண்மூடித்தனமான சேறு பூசல்கள் இன ஐக்கியத்தினை (குறைந்தபட்சம் எம்முடைய நியாயத்தன்மையையாவது) எந்தளவுக்கு செறிமைப்படுத்தும் என்ற ஐயம் ஒரு பக்கம் இருக்க, இவ் வகையான பாரபட்சப்படுத்தப்பட்ட செயற்பாடுகளின் பின்னாலுள்ள "அரசியல்" என்ன என்பது அலசப்பட வேண்டிய விடயம்.  குறிப்பாக குடாநாட்டில் அதிகம் பேசப்படுகின்ற "அதிகரித்த" பாலியல் பலாத்காரம், விபச்சாரம் மற்றும் இராணுவத்தினரின் அதீத சமூக ஈடுபாடு போன்றனவற்றை குறிப்பிடலாம். யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை பிரதட்சணம் செய்யப்பட்டதில் இராணுவத்